'சேவாக்கை அவுட்டாக்குவது எளிது' : பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராணா நவேத்-உல்-ஹாசன்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராணா நவேத்-உல்-ஹாசன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்குடன் விளையாடிய நாட்களில் அவரை ஸ்லெட்ஜிங் செய்து வெறுப்பேற்றிய சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அவர் இந்திய அணியில் வெளியேற்றுவதற்கு எளிதான பேட்டர் என்றும் கூறினார்.
அதே சமயம் இந்திய அணியில் அவுட்டாக்க சிரமமான வீரர் என்றால் அது ராகுல் டிராவிட்தான் என தெரிவித்தார்.
இது தொடர்பாக, நாதிர் அலி போட்காஸ்டில் பேசிய ராணா, 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் விளையாடிய ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நினைவு கூர்ந்தார். பாகிஸ்தான் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
rana sledges virendra sehwag
வீரேந்திர சேவாக்கை ஸ்லெட்ஜிங் செய்து அவுட்டாக்கிய ராணா நவேத்-உல்-ஹாசன்
அந்த தொடரின் ஒரு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் வீரேந்திர சேவாக் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், ராணா நவேத்-உல்-ஹாசன் பந்துவீச வந்துள்ளார்.
அப்போது ஷேவாக்கிடம் சென்ற ராணா, சேவாக்கிற்கு விளையாடவே தெரியவில்லை என்றும், அவர் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருக்கவே முடியாது என்றும் கூறி சீண்டியுள்ளார்.
சேவாக் இதனால் கடுப்பானதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ராணா, அடுத்த பந்தில் அவுட்டாக்கியுள்ளார்.
இன்சமாம்-உல்-ஹக் உடனான அரட்டையின் போது ஒரு ஆட்டத்தில் சேவாக்கின் விக்கெட்டைக் கணித்ததாகவும், இதை சரியாக பயன்படுத்தி ஸ்லெட்ஜிங் செய்து அடுத்த பந்தில் வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.
ஸ்லெட்ஜிங் செய்து எதிரணி வீரரை அவுட்டாக்குவது எல்லாம் வேகப்பந்து வீச்சாளரின் தந்திரங்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.