இந்திய கிரிக்கெட் அணி: செய்தி

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு 277 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

'கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்..' : தோனியின் பெருந்தன்மை குறித்து ஸ்ரீசாந்த் புகழாரம்

இரண்டு உலகக்கோப்பைகளில் ஒன்றாக விளையாடியிருந்தாலும், எம்எஸ் தோனியிடம் தான் பல விஷயங்களில் முரண்பட்டு இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

IND vs AUS முதல் ஒருநாள் போட்டி : எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெரும் அடியாக, அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Sports Round Up: இந்திய பாய்மர படகு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம்; டாப் விளையாட்டு செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை (செப்டம்பர் 20) நடந்த பாய்மர படகு போட்டியின் பல்வேறு பிரிவுகளில் இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

மூவர்ணக் கொடியுடன் இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது அடிடாஸ்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் புதன்கிழமை (செப்.20) வெளியிட்டது.

ஒரு தவறை சரிசெய்ய மற்றொரு தவறு; இந்திய அணியை விளாசிய ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹலை நீக்கியதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் மனம் உடைந்த சஞ்சு சாம்சன்? ரசிகர்கள் நெகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக புறக்கணிப்பிற்கு உள்ளதாக கூறப்படும் சஞ்சு சாம்சனுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

'ரோஹித் எப்பவுமே இப்படித்தான்' : பாஸ்போர்ட்டை மறந்தது குறித்த விராட் கோலியின் சுவாரஸ்ய தகவல்

ஞாயிற்றுக்கிழமை (செப்.17) இந்திய கிரிக்கெட் அணி 2023 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவின் ட்ரம்ப் கார்டு இவர் தான் : அஜித் அகர்கர்

சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை 2023 தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எட்டாவது முறையாக பட்டத்தை வென்றது.

Sports Round Up : டேவிஸ் கோப்பையிலிருந்து போபண்ணா ஓய்வு; ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 20 ஆண்டுகாலம் விளையாடி வரும் 43 வயதான மூத்த இந்திய வீரர் ரோஹன் போபண்ணா, அதிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

INDvsAUS : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது.

இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு தேவையா? வாசிம் அக்ரம் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக கைப்பற்றியது.

7 ஓவர்களுடன் முகமது சிராஜை நிறுத்தியது ஏன்? உண்மையை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) ஆசிய கோப்பையில் இலங்கையை 50 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.

'அந்த மனசு தான் சார் கடவுள்' : முகமது சிராஜின் செயலால் நெகிழ்ந்த கிரிக்கெட் உலகம்

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடந்த ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் அபார வெற்றிக்கு மூல காரணமாக இருந்த முகமது சிராஜ் போட்டிக்கு பிறகு செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை இவ்ளோதானா!

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடந்த இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதன் மூலம் ஆசிய கோப்பை 2023 ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்துள்ளது.

21 வருடங்களில் இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் ஆனார் முகமது சிராஜ்

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இலங்கையின் டாப்-ஆர்டரை எளிதாக துவம்சம் செய்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் யாராலும் எளிதாக மறக்க முடியாத சாதனை படைத்துள்ளார்.

இரக்கமே இல்லாமல் சம்பவம் பண்ணிய இந்தியா; எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) கொழும்புவில் நடந்த ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா தனது எட்டாவது ஆசிய கோப்பையை வென்றது.

INDvsSL : டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்; மழையால் தாமதமாக தொடங்கிய போட்டி

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி : சச்சின், தோனியின் சாதனையை சமன் செய்வாரா ரோஹித் ஷர்மா?

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற உள்ள நிலையில், 8வது முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் இந்தியா இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்திய சுழல் ஜாம்பவான் அஸ்வின் ரவிச்சந்திரனின் 37வது பிறந்தநாள் இன்று

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்17) புகழ்பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது 37வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஆசிய கோப்பையில் இந்தியா வென்றாலும், பாகிஸ்தான் நம்பர் 1 அணியாக மாறும், எப்படி தெரியுமா?

2023 ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையை இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தாலும், பாகிஸ்தான் மீண்டும் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியாக முடியும் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டிகளில் INDvsSL நேருக்கு நேர் புள்ளிவிபரம்

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) கொழும்பு ஆர் பிரேமதேசா மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஒரு பெரிய கோப்பைக்கான 5 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவர இந்திய கிரிக்கெட் அணி விரும்புகிறது.

INDvsBAN : ஷுப்மன் கில் சதம் வீண்; கடைசி ஓவரில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்திடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

IND vs BAN : இந்தியாவுக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம்

கொழும்பு ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக வங்கதேசம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது.

தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் உறவில் ஈடுபட மாட்டோம் என்பது இந்தியாவின் நீண்டகால முடிவாகும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

IND vs BAN : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ்; வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியில் மாற்றம் எனத் தகவல்

ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் தொடர்ச்சியாக 3 நாட்கள் விளையாடிய இந்திய அணி, இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) வங்கதேச கிரிக்கெட் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஆசிய கோப்பை : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா?

ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

இதே நாளில் அன்று : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி அறிமுகமான தினம்

2007 ஆம் ஆண்டு இதே நாளில், புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிமுகமானார்.

14 Sep 2023

பிசிசிஐ

இந்திய அணியின் தேர்வுக்குழுவில் மீண்டும் மாற்றத்திற்கு தயாராகும் பிசிசிஐ; பின்னணியில் அஜித் அகர்கர்

பிசிசிஐ ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை 2023 : இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 12) நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

IND vs SL : இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி துனித் வெல்லலகே அசத்தல்

கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் துனித் வெல்லலகே அபாரமாக பந்துவீசி முதல் முறையாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

IND vs SL : இலங்கை அபார பந்துவீச்சு; 213 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்

செவ்வாயன்று (செப்டம்பர் 12) நடந்த ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா முதல் இன்னிங்ஸில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய தொடரில் 50 சதங்களை எட்டுவார் விராட் கோலி; சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களை விராட் கோலி முறியடிப்பார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து ரோஹித் ஷர்மா சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்துள்ளார்.

முழு உடற்தகுதி இல்லை; ஷ்ரேயாஸ் ஐயரை இலங்கைக்கு எதிரான போட்டியிலிருந்து நீக்கியது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்டரான ஷ்ரேயாஸ் ஐயர், முதுகுவலி காரணமாக இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.