
முழு உடற்தகுதி இல்லை; ஷ்ரேயாஸ் ஐயரை இலங்கைக்கு எதிரான போட்டியிலிருந்து நீக்கியது பிசிசிஐ
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்டரான ஷ்ரேயாஸ் ஐயர், முதுகுவலி காரணமாக இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக, முதுகுவலி காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு கேஎல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த போட்டியில் கேஎல் ராகுல் சதமடித்ததோடு, இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
bcci carefully deals shreyas iyer health issue
ஒருநாள் உலகக்கோப்பையை மனதில் வைத்து பிசிசிஐ முடிவு
இலங்கைக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன், ஷ்ரேயாஸ் ஐயரின் உடற்தகுதியில் முன்னேற்றம் இருந்தாலும், இலங்கைக்கு எதிரான போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் ஒருநாள் உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில், அதை மனதில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவை பிசிசிஐ எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பிசிசிஐ மேலாளர்கள், தேசிய கிரிக்கெட் அகாடமி பணியாளர்கள் மற்றும் கொழும்பில் உள்ள அணி நிர்வாகத்தின் தொலைநிலை கண்காணிப்பில் உள்ளார். தற்போதைக்கு இலங்கைக்கு எதிரான போட்டியிலிருந்து மட்டும் விடுவிக்கப்பட்டிருந்தாலும், செப்டம்பர் 15ஆம் தேதி நடக்க உள்ள வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இருந்தும் அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.