Page Loader
INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 22, 2023
09:57 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அரைசதம் கடந்து அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். அணியின் எந்தவீரரும் அதிகபட்ச ரன் குவிக்க முடியாத நிலையில், 50 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

India beats by 9 wickets

இந்திய அணியில் நான்கு வீரர்கள் அரைசதம்

277 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 71 ரன்களுக்கு அவுட்டான நிலையில், ஷுப்மன் கில்லும் 83 அவுட்டான நிலையில், அதன்பின்னர் கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தனர். சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய 3 ஒருநாள் போட்டிகளிலும் டக்கவுட் ஆன நிலையில், இந்த போட்டியில் 50 ரன்கள் எடுத்தார். கேஎல் ராகுல் கடைசி வரை அவுட்டாகாமல் 58 ரன்கள் எடுக்க, இந்தியா 48.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.