Page Loader
இந்திய சுழல் ஜாம்பவான் அஸ்வின் ரவிச்சந்திரனின் 37வது பிறந்தநாள் இன்று
இந்திய சுழல் ஜாம்பவான் அஸ்வின் ரவிச்சந்திரனின் 37வது பிறந்தநாள் இன்று

இந்திய சுழல் ஜாம்பவான் அஸ்வின் ரவிச்சந்திரனின் 37வது பிறந்தநாள் இன்று

எழுதியவர் Sekar Chinnappan
Sep 17, 2023
12:11 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்17) புகழ்பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது 37வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1986ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் பிறந்த அஸ்வின், இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கான வாய்ப்பு குறைந்துவிட்டாலும், 2022 டி20 உலகக்கோப்பையில் அணியில் இடம்பெற்று மிகச்சிறந்த கம்பேக் கொடுத்தார். இந்த தருணத்தில் அஸ்வின் ரவிச்சந்திரன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். அஸ்வின் தனது சுழற்பந்து வீச்சு திறமைக்கு பெயர் பெற்றிருந்தாலும், பேட்டிங்கில் அவர் 3,799 ரன்களை குவித்துள்ளார். சுவாரஸ்யமாக, அவர் தனது கிரிக்கெட் பயணத்தை ஒரு தொடக்க பேட்ஸ்மேனாகத் தொடங்கினாலும், அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் சி.வி.விஜய், அவரை ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளராக செதுக்கியுள்ளார்.

Ashwin Ravichandran celebrates 37th Birthday

டெஸ்ட் மேட்ச் மேஸ்ட்ரோ அஸ்வின் ரவிச்சந்திரன்

இந்தியாவின் கிரிக்கெட் வெற்றியில் அஸ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ், அவர் 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, 86 போட்டிகளில் 442 விக்கெட்டுகளுடன், இந்த வடிவத்தில் இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான பந்துவீச்சாளராக அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். கிரிக்கெட் மைதானத்திற்கு அப்பால், அஸ்வின் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் விளையாட்டின் தெளிவான மற்றும் நுண்ணறிவு பகுப்பாய்விற்கு பெயர் பெற்றவர் ஆவார். கிரிக்கெட் மட்டுமின்றி, டென்னிஸ் விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட அஸ்வின், மாநில அளவில் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார்.