IND vs AUS முதல் ஒருநாள் போட்டி : எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறவில்லை. இந்நிலையில், அஸ்வின் விளையாடும் 11இல் சேர்க்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. மேலும், மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு வரும் இஷான் கிஷன் இந்த போட்டியில் ஷுப்மன் கில்லுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளது. எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்: ஷுப்மான் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், திலக் வர்மா/வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அஸ்வின் ரவிச்சந்திரன், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
கணுக்கால் காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியை தவறவிட்ட கிளென் மேக்ஸ்வெல்லுக்கு முதல் போட்டியில் ஓய்வளிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் மிட்செல் ஸ்டார்க்கும் இந்த போட்டியில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடாத ஸ்டீவ் ஸ்மித் இந்த போட்டியின் விளையாடும் லெவனில் இடம்பெறுவார் என்பதை பாட் கம்மின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையே, ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம்பெறாத மார்னஸ் லாபுசாக்னேவும் இந்த தொடரில் விளையாடுகிறார். எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.