LOADING...
இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு தேவையா? வாசிம் அக்ரம் கேள்வி
இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு தேவையற்றது என வாசிம் அக்ரம் கருத்து

இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு தேவையா? வாசிம் அக்ரம் கேள்வி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 18, 2023
05:49 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக கைப்பற்றியது. எனினும், இந்த தொடரில் ஷ்ரேயாஸ் மற்றும் அக்சர் படேல் முதுகு வலி மற்றும் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், ஒருநாள் உலகக்கோப்பையில் இவர்களுக்கு மாற்று வீரரை பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கிடையே, ஆசிய கோப்பையை முடித்த கையேடு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது. இந்த போட்டிகள் செப்டம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் முறையே மொஹாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட் மைதானங்களில் நடைபெற உள்ளது.

Wasim AKram warns India Cricket Team

இந்தியாவின் ஒருநாள் தொடர் குறித்து வாசிம் அக்ரம் கருத்து

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது சரியான முடிவல்ல எனக் கூறியுள்ளார். இந்த தொடர் முடிந்து ஒருநாள் உலகக்கோப்பை தொடங்க சில தினங்களே உள்ளதால், இரு அணிகளும் போட்டிக்கு முன் ஓய்வெடுக்க குறுகிய காலமே உள்ளது. மேலும், போட்டிகள் அனைத்தும் ஒரே இடத்தில் நடக்காமல் வெவ்வேறு மைதானங்களில் நடப்பதால், அதற்காக வீரர்கள் பயணம் உள்ளிட்ட அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால், இந்திய அணி இந்த தொடரை தவிர்த்திருக்கலாம் என வாசிம் அக்ரம் கூறியுள்ளார். உலகக்கோப்பை தொடங்கும் முன், செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 3இல் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.