இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

பாலின் விலை உயர்வு

இந்தியா

இன்று முதல் மதர் டைரி பாலின் விலை ரூ.2 உயர்த்த முடிவு; நடப்பாண்டில் இது 5வது விலையேற்றம்

மதர் டைரி முழு கிரீம் பாலின் விலையை, இன்று முதல் உயர்த்தப்போவதாக அந்நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்

தமிழக அரசு

திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு

தமிழகத்தில் மாவட்டந்தோறும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களை அமைத்து தருமாறு தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றினை வெளியிட்டது.

வீட்டிலேயே தொழில் செய்யும் பெண்கள் கலந்துக்கொண்டனர்

தொழில்முனைவோர்

தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட்

கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பெண்களுக்காக பெண்களே ஏற்பாடு செய்த கிறித்துமஸ் மார்க்கெட்டில் சுய தொழில் செய்யும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர்

இந்தியா

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் ஒரு நட்சத்திரம்!

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பெயர் ஒரு நட்சத்திரத்திற்கு சூட்டப்பட்டுள்ளதாக அவுரங்காபாத் பா.ஜ.க. தலைவர் ஷிரிஷ் போரால்கர் தெரிவித்திருக்கிறார்.

கடன் மோசடி

இந்தியா

கடன் மோசடி: வீடியோகான் CEO வேணுகோபால் கைது!

ரூ.3250 கோடி கடன் மோசடி செய்த வழக்கில் வீடியோகான் CEO வேணுகோபால் தூத்(71) கைது செய்யப்பட்டுள்ளார்.

26 Dec 2022

உலகம்

தென் கொரியாவை சேர்ந்தவர் இந்தியாவில் பலி!

குஜராத்தில் பாராகிளைடிங் என்ற சாகச விளையாட்டு செய்த சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.

டி.ஐ.ஜி. ஹரி கிருஷ்ணா தலைமையில் எரிக்கப்பட்டது

இந்தியா

7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது

ஆந்திர மாநிலம், குண்டூர், அல்லூரி சீதாராம ராஜு, பார்வதிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கஞ்சா செடிகள் அதிகம் பயிரிடப்படுகிறது என்று தகவல்கள் வெளியானது.

எல்லை

சீனா

இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்!

சீனர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதால் இந்திய-சீன எல்லையில் தொடர் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுக்கும் ஆன்லைன் லோன் செயலி

கடன்

கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம்

தற்போதைய காலக்கட்டத்தில், ஆன்லைனில் கடன் தரும் ஏராளமான செயலிகள் செயல்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய அரசு

கொரோனா

மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா பாதிப்புகள் சில மாதங்களுக்கு முன்னேரே சற்று ஓயத்துவங்கி மக்களும் இயல்பு வாழ்விற்கு திரும்பினர்.

சிபிஐ விசாரணை

சென்னை

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை

கடந்த 2017ம் ஆண்டு இந்தியன் வங்கியில் வாங்கிய ரூ.150 கோடி கடனுக்காக, சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கடந்த ஜூலை மாதம் முடக்கப்பட்டது.

காளையார் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்டது

தமிழ்நாடு

மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, போன்ற 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்வு செய்து, மத்திய அரசு சார்பில் அதனை எழுதிய எழுத்தாளர்களுக்கு உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அளிக்கப்படும்.

5 டன் எடையில் 10 லட்சம் செலவில் உருவான வீணை

வைரல் செய்தி

உத்தரப்பிரேதேசத்தில் கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய வீணை

உத்தரப்பிரதேசம், போபால் மாவட்டத்தில் உள்ள ஒரு கைவினை கலைஞர் குழு வாகனக் கழிவுகளை கொண்டு உலகிலேயே மிக பெரிய வீணையை உருவாக்கியுள்ளார்கள்.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு

ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மின் தடை ஏற்படும் அபாயம்?

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வானது அறிவிக்கப்படாமல் உள்ளது.

மண்டபம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தம்

தமிழ்நாடு செய்தி

பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம்

108 ஆண்டு பழமையானது இந்த கடல் வழி பாலமான பாம்பன் பாலம். இதன் நடுவில் உள்ள தூக்குப்பாலம் அடிக்கடி பழுதடைந்து விடும்.

இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வு

இந்தியா

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல் பகுதியில் ராமர் பாலம் உண்டா இல்லையா? என்கிற வாதம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்திய பாதுகாப்பு படை நடத்திய தேர்வில் வெற்றி

விமானம்

இந்திய விமானப்படையின் இரண்டாவது பெண் பைலட்-உத்தரப்பிரேதேசத்தை சேர்ந்த சானியா மிர்ஸா தேர்வு

உத்தரப்பிரேதேச மாநிலம், மிர்சாப்பூரை சேர்ந்தவர் ஷாகித் அலி. டிவி மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவரது மகள் சானியா மிர்ஸா, இந்திய விமானப் படையில் போர் விமானியாக தேர்வாகியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேட்டி

கொரோனா

கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்

மீண்டும் தற்போது உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎப்7 வேகமாக பரவி வருகிறது.

மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம்

தமிழ்நாடு

திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்

திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

கல்வி நிறுவனங்கள்

அரசியல் நிகழ்வு

70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்!

IIT போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய வகுப்பினருக்கான 70% பணியிடங்கள் நிரப்பபடாமலேயே இருக்கிறது என்ற தகவல் மக்களவைக் கூட்டத்தில் தெரிய வந்திருக்கிறது.

22 Dec 2022

உலகம்

குளிர்கால சங்கிராந்தி 2022: இன்று ஆண்டின் மிகக் குறுகிய நாள்!

ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால சங்கிராந்தி என்பது அந்த ஆண்டின் மிக குறுகிய நாளாக அமையும்.

மீண்டும் கொரோனா

கொரோனா

மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை!

சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 கொரோனா இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதால் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிர படுத்தி இருக்கின்றனர்.

வேகமாக பரவும் திறன் கொண்ட பிஎப்7 வைரஸ்

கொரோனா

இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா பாதிப்பு அலைகள் சமீப காலமாக குறைந்து, மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனாவின் புது ரூபமான பிஎப்7 என்னும் வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக செய்திகள் வெளியானது.

450 அரசு விரைவு பேருந்துகளில் 22,000 பேர் நாளை பயணம்

சென்னை

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

வரும் 25ம் தேதி கிறிஸ்துவர்களது பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ளது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவிடம்

அதிமுக

எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி

அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரனின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஆய்வு மேற்கொண்டதில் 4 சிறுவர்கள் மீட்பு

சென்னை

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சென்னை சாலிகிராமம், கோயம்பேடு போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கடும் எதிர்ப்பு

போராட்டம்

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு

சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.

"நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி

சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

23 Dec 2022

திமுக

காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு பாத யாத்திரை நடக்கிறது.

23 Dec 2022

கொரோனா

கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!

ஆந்திரா மாநிலம் காகிநாடா என்ற ஊரை சேர்ந்த இரு பெண்கள் கொரோனா பயத்தில் 3வருடங்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது.

விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி!

சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தால் 16 ராணுவ வீரர்கள் இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு!

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டு மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் இலவச ரேஷன் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

"பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம்

தமிழக முதல்வர் பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற பெயர் வைத்து தேவையே இல்லாமல் 3 கோடி ரூபாய் வீணடித்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

திருப்பதி

திருப்பதி

திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஜி 20 மாநாடு

உலக செய்திகள்

ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ

அர்ஜென்டினா, சீனா, பிரேசில், தென் கொரியா, துருக்கி, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, மெக்சிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளை கொண்டது தான் ஜி 20 அமைப்பு.

பெரியாரின் பெண்ணியம்! நினைவு கொள்வோம் பெரியாரை!

மூட நம்பிக்கைகளாலும் சாதி கொடுமைகளாலும் நாடே சிக்கி தவித்த கால கட்டத்தில் பகுத்தறிவின் தந்தையாக எழுந்தவரே ஈ. வெ. இராமசாமி.

சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு விழுந்த பள்ளம்

வைரல் செய்தி

ஐதராபாத்தில் வாரச்சந்தை நடந்த சாலையில் திடீர் பள்ளம்-வைரலாகும் வீடியோ

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் கோஷ்மஹால் பகுதியில் உள்ள சக்னவாடியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வாரச்சந்தை நடந்தது.

22 Dec 2022

இந்தியா

கேரளாவில் மீண்டும் நர பலியா? - காவல் துறை

கேரளாவில் கணவரோடு சேர்த்து வைக்கிறோம் என்று கூறி பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.