குளிர்கால சங்கிராந்தி 2022: இன்று ஆண்டின் மிகக் குறுகிய நாள்!
ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால சங்கிராந்தி என்பது அந்த ஆண்டின் மிக குறுகிய நாளாக அமையும். குளிர்கால சங்கிராந்தி இந்த வருடம் டிசம்பர் 22 அதாவது இன்று நடைபெறுகிறது. இதனால், இன்று பகல் பொழுது குறைவாகவும் இரவு நீண்டதாகவும் இருக்கும். பொதுவாக, குளிர்கால சங்கிராந்தி ஆண்டுக்கு இரண்டு முறை நிகழும். ஒரு முறை பூமியின் வடக்கு அரைக்கோளத்திலும் ஒரு முறை தெற்கு அரைக்கோளத்திலும் இது நிகழ்கிறது. அதுவும் அந்த குறிப்பிட்ட அரைக்கோளத்தின் குளிர்காலத்தில் தான் இது நிகழும். நம் அரைக்கோளமான வடக்கு அரைக்கோளத்தில் இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நிகழ்கிறது. தெற்கு அரைக்கோளத்தில் அவர்களது குளிர்காலமான ஜூன் மாதத்தில் இது நிகழும்.
குளிர்கால சங்கிராந்தி: வானியல் ரீதியான விளக்கம்!
இந்த குளிர்கால சங்கிராந்தி முடிந்தவுடன் தான் பல நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகும். ஆனால், நமக்கு இது குளிர்காலத்தின் நடுவில் அமைந்திருக்கிறது. இந்த குளிர்கால சங்கிராந்தி அன்று நமக்கு 8 மணிநேரம் 46 நிமிடங்கள் மட்டுமே சூரிய ஒளி கிடைக்கும். சூரியன் பூமியில் இருந்து மிக தொலைவில் இருப்பதை தான் சங்கிராந்தி என்று சொல்கிறார்கள். வடக்கு அரைக்கோளத்தில் குளிர்கால சங்கிராந்தி நிகழும்போது, வட துருவமானது சூரியனிலிருந்து 23.4° (23°27′) தொலைவில் சாய்ந்திருக்கும். இதன் பிறகு, நமக்கு இரவு பொழுது குறைவாகவும் பகல் பொழுது நீண்டதாகவும் மாறிவிடும். அதனாலேயே, இதை பல கலாச்சாரங்களில் 'சூரியனின் மறுபிறப்பு' என்று அழைக்கிறார்கள்.