பெரியாரின் பெண்ணியம்! நினைவு கொள்வோம் பெரியாரை!
மூட நம்பிக்கைகளாலும் சாதி கொடுமைகளாலும் நாடே சிக்கி தவித்த கால கட்டத்தில் பகுத்தறிவின் தந்தையாக எழுந்தவரே ஈ. வெ. இராமசாமி. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரமம், பெண்ணியம் போன்ற பல புரியாத மொழிகளில் பேசி திரிந்தவர் இவர். பொதுவாக மக்களின் பெயருக்கு பின்னால் அவர்களது சாதியின் பெயர் பட்ட பெயராகப் போட பட்டிருக்கும். இதே முறை தான், இப்போது வரை இந்திய நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தைத் தவிர! இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். அந்த நேரத்தில், கூனி குறுகி அடிமையாக வாழ்ந்து வந்த பெண்களின் உரிமைக்காக எழுச்சிமிக்க கருத்துக்கள் பலவற்றையும் இவர் கூறியுள்ளார்.
பெண் விடுதலையும் பெரியாரும்!
பெரியாரை எதிர்த்து பலதரப்பினர் பல விதமான கருத்துக்களை முன் வைத்தாலும், அந்த காலகட்டத்திலேயே பெண் விடுதலை குறித்து புரட்சி மிக்க கருத்துக்களைப் பரப்பியது பாராட்ட தக்கது. அவர் பெண்விடுதலை குறித்து கூறிய சில கருத்துக்களைப் பார்க்கலாம். "பெண் விடுதலை வேண்டும் என்றால் பெண்களின் கையில் இருக்கும் கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகத்தைக் கொடுங்கள்." "பெண்கள் முன்னேறி இருந்தால் அச்சமூகமே முன்னேறி விட்டது என்று பொருள்." என்று பெண் கல்வியை வலியுறுத்திய பெரியார், பெண்களின் ஆடை சுதந்திரம், சொத்துரிமை, மறுமணம், பெண்சிசுக் கொலை, உடன் கட்டை ஏறுதல் போன்ற பல்வேறு கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். சர்ச்சையான பல கருத்துக்களைப் பதிவு செய்து, நம்மையும் சுயமாக சிந்திக்க வைத்துவிட்டு சென்ற பெருமை பெரியாரையே சேரும்.