Page Loader
திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு
திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் கட்டப்படும் நூலகம்

திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு

எழுதியவர் Nivetha P
Dec 26, 2022
11:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் மாவட்டந்தோறும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களை அமைத்து தருமாறு தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றினை வெளியிட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஜெயின் நகரில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், டி.என்.பி.எஸ்.ஸி., யு.பி.எஸ்.சி., உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகும் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள் திருவள்ளூர் மாவட்ட மைய நூலகத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

ஜனவரி மாத இறுதிக்குள் பணிகள் முடிவுறும்

2300 சதுர மீட்டர் பரப்பளவிளான இடத்தில் 457 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் நூலகம்

அதனால் கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்ட நிதியில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2300 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இடத்தில், 457 சதுர மீட்டர் பரப்பளவில் இரு தளம் கொண்ட நூலகம் குழந்தைகள் விளையாட்டு வாயிலாக கல்வி பயிலும் வகையிலான பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஆகியவற்றுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் நூலகத்தில் இணையத்தளங்களை பயன்படுத்துவதற்காக 4 கணினிகள் கொண்ட அறை, நூல்களை நகல் எடுக்கும் வசதிகளும் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய கட்டுமான பணி 70 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் வரும் ஜனவரி இறுதிக்குள் முடிக்கப்படும்" என்று கூறியுள்ளனர்.