Page Loader
கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!
3 வருடங்கள் அறையை விட்டு வெளியே வராத தாய் மற்றும் மகள்(படம்: News 18 Tamilnadu)

கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!

எழுதியவர் Sindhuja SM
Dec 25, 2022
06:49 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திரா மாநிலம் காகிநாடா என்ற ஊரை சேர்ந்த இரு பெண்கள் கொரோனா பயத்தில் 3வருடங்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது. தற்போது காவலர்கள் இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 2020ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா அதிகமாகப் பரவிக் கொண்டிருந்தது. இதனையடுத்து ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் போடபட்டன. பலர் கொரோனாவைக் கண்டு பயந்தாலும் ஊரடங்கு முடிந்ததும் எல்லோரும் தடுப்பூசிகளைப் போட்டு கொண்டு அவரவர் வாழ்க்கையைப் பார்க்க சென்றுவிட்டனர். ஆனால், இந்த கொரோனா பயத்தினால் ஆந்திராவை சேர்ந்த இருவர் அறையை விட்டு கூட வெளியே வராமல் 3வருடங்கள் அறைக்குள்ளேயே இருந்திருக்கின்றனர். தாய் மணி, மகள் துர்கா மற்றும் தந்தை சுரி பாபு ஆகியோர் காகிநாடாவில் வாழ்ந்து வந்துள்ளனர்.

23 Dec 2022

தாய் மற்றும் மகள் மீட்பு!

3 வருடங்களாக யாரையுமே சந்திக்காமல் சூரியவெளிச்சத்தை கூட பார்க்காமல் அறைக்குள்ளே அடைந்து கிடந்த தாய் மற்றும் மகளை, சுரி பாபு வெளியே அழைத்து வர எவ்வளோவோ முயற்சி செய்துள்ளார். ஆனால், அது நடக்கவே இல்லை. ஒவ்வொரு முறை இதைப் பற்றி பேச நெருங்கும் போதெல்லாம் தாயும் மகளும் கூச்சலிட்டு சுரி பாபுவை விரட்டி அடித்துள்ளனர். இதனால் வேறு வழி இல்லாமல் சுரி பாபு இதைப் பற்றி போலீஸில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கடந்த செய்வாய்க்கிழமை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர்களது வீட்டிற்குள் நுழைந்த காவலர்கள் இரு பெண்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவர்களுக்கு உடல் ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும் இவர்களது மனநலனைப் பரிசோதிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.