
ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல் பகுதியில் ராமர் பாலம் உண்டா இல்லையா? என்கிற வாதம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பாஜக எம்.பி.ஷர்மா, "இந்தியாவின் தொன்மையான வரலாற்றை கொண்ட ராமர் சேது பாலம் இருப்பது உண்மையா என்பதையறிய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது" போன்ற கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு மத்திய விண்வெளி ஆய்வுத்துறை இணை இயக்குனர் ஜிஜெந்திர சிங் பதிலளித்தார். இது குறித்து அவர் பேசுகையில், "இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வு செய்ததில் ராமர் பாலம் நிச்சயம் உள்ளது என்று துல்லியமாக கூற முடியாது.
அதே போல், ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே உள்ள திட்டுக்கள் பாலத்தின் சிதைந்த பகுதி என்றோ, மிச்ச சொச்சம் என்றோ கூற முடியாது.
18,000 ஆண்டுகள் முந்தைய வரலாறு-தொடரும் சிக்கல்கள்
56 கி.மீ. நீளத்துக்கு பாலம் இருந்ததாக நம்பப்பட்டு வருகிறது
18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் என்பதால் ராமர் பாலம் குறித்து கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "56 கி,மீ. நீளத்துக்கு பாலம் இருந்ததாக நம்பப்பட்டு வருகிறது.
ஆனால், உண்மையில் அதன் கட்டமைப்பை சரியாக குறிப்பிடுவது கடினம்.
அந்த கட்டமைப்பு இருந்ததற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஓர் அறிகுறி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ராமர் பாலம் குறித்து புராண மற்றும் வரலாற்று கதைகள் பலவிதமாக வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.