காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி!
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு பாத யாத்திரை நடக்கிறது. இந்த பாத யாத்திரையில் திமுக துணை பொது செயலாளர் எம்.பி கனிமொழி இன்று கலந்து கொண்டார். மேலும், மூத்த தலைவர்கள் குமாரி செல்ஜா, ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோரும் இன்று இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர். நாளை ராகுல் காந்தி டெல்லியில் பாத யாத்திரை செய்ய உள்ள நிலையில் இன்று திமுகவின் முக்கிய தலைவரான எம்.பி கனிமொழி இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டது பல்வேறு கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாதை யாத்திரையில் கலந்து கொள்ளும் கமல் ஹாசன்!
கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த 3750 கிமீ பாத யாத்திரை 100 நாட்கள் கடந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று அரியானாவில் நடைபயணம் செய்து கொண்டிருக்கும் ராகுல் காந்தி நாளை மாலை டெல்லியின் எல்லைக்குள் நுழைவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திமுகவின் எம்.பி கனிமொழி இந்த நடை பயணத்தில் கலந்துகொண்டுளார். இவர் திமுக கட்சி கொடியின் நிறத்தில் சேலை அணிந்து ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டது மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மேலும், நாளை(டிச:23) மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் இந்த நடை பயணத்தில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை ராகுல் காந்தியுடன் டெல்லியில் வைத்து இவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.