55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 2003-2007ஆம் ஆண்டுகளில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவின் லஞ்ச புகார் வழக்கை விசாரித்த போது அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கோவையில் ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த நிறுவனத்தினிடம் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலம் இருந்திருக்கிறது. ஆ.ராசாவின் மீது சுமத்த பட்டிருந்த லஞ்ச புகாரை விசாரிக்கும் போது இந்த 45 ஏக்கர் நிலத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அமலாக்கத்துறைக் கொடுத்த தகவல்கள்
ஆ.ராசா, மத்திய அமைச்சராகப் பதவி வகித்த போது இவர் லஞ்சம் வாங்கியதாகப் புகார்கள் எழுந்தன. இதை விசாரித்த அமலாக்கதுறை, "ஆ.ராசா குருகிராமில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி இருக்கிறார். இதற்காக ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2007ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆ.ராசா தனது குடுப்பதினர் மற்றும் நண்பர்களின் பெயர்களுக்கு மாற்றி இருப்பதும் தெரியவந்திருக்கிறது. மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் வேறெந்த வர்த்தகமும் செய்யவில்லை. குருகிராம் நிறுவனத்திடம் இருந்த பெறப்பட்ட பணத்தை வைத்து 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அமலாக்கதுறை அந்த 45 ஏக்கர் நிலத்தையும் முடங்கியுள்ளது.