7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது
ஆந்திர மாநிலம், குண்டூர், அல்லூரி சீதாராம ராஜு, பார்வதிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கஞ்சா செடிகள் அதிகம் பயிரிடப்படுகிறது என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் விசாகப்பட்டினம் வனப்பகுதியில் போலீசார் தொடர்ந்து சோதனையிட்டு வந்த நிலையில், 7500 ஏக்கர் அளவிலான கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சம் கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டைகளை தீயிட்டு கொழுத்த காவல்துறையினரால் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, குண்டூர் அருகே உள்ள மைதானத்தில் டி,ஐ.ஜி. ஹரி கிருஷ்ணா தலைமையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கீழே கொட்டி கட்டைகளை அடுக்கி போலீசார் தீயிட்டு கொளுத்தினர்.
மேலும் 650 ஏக்கரில் கஞ்சா தோட்டங்கள் இருப்பது கண்டுபிடிப்பு
தீயிட்டு கொளுத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.250 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விசாகப்பட்டின வனப்பகுதியில் மேலும் 650 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா தோட்டங்கள் இருப்பதும் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல் துறை அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய டி.ஐ.ஜி. ஹரி கிருஷ்ணா அவர்கள், "காஞ்சாவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் கஞ்சாவை ஊடுபயிராக பயிறுடுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.