சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை
கடந்த 2017ம் ஆண்டு இந்தியன் வங்கியில் வாங்கிய ரூ.150 கோடி கடனுக்காக, சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கடந்த ஜூலை மாதம் முடக்கப்பட்டது. வங்கியில் கடன் வாங்க கூறப்பட்ட காரணங்களுக்கு பதிலாக, பணத்தை வேறு விதத்தில் முதலீடு செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதே போல் ரூ.120 கோடி-யை இந்தியன் வங்கியில் கடனாக பெற்று, அதன் நிலுவை தொகையை செலுத்தாத காரணத்தினால் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையினை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்து நடவடிக்கையினை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தனியார் வங்கியில் ரூ,66 கோடியே 93 லட்சம் மோசடி செய்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்
இதனை தொடர்ந்து, சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அமலாக்கத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து தான் முன்னதாக அவர்களது ரூ.235 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் தற்போது, தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியை ஏமாற்றி சட்டவிரோதமாக மீண்டும் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.66 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களை நேற்று அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.