Page Loader
திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா?
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் திருப்பதி தேவஸ்தானம்(படம்: The New Indian Express)

திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா?

எழுதியவர் Sindhuja SM
Dec 25, 2022
03:35 pm

செய்தி முன்னோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அதிவேகமாக BF.7 என்ற கொரோனா வகைப் பரவி கொண்டிருக்கிறது. இதே கொரோனா வகை இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதால் மத்திய அரசும் மாநில அரசும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாக, சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். பின், எல்லோரும் கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அந்த வரிசையில், ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருப்பதி கோவிலுக்குள் செல்வதற்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

கோவிலில் கூடும் பக்தர்கள் கூட்டம்!

திருப்பதி கோவில் என்றாலே எப்போதும் கூட்டமாகத் தான் இருக்கும். பிற நாடுகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பல லட்ச பக்தர்கள் தினமும் வந்து போகும் இடம் திருப்பதி கோவிலாகும். இப்படி பல்லாயிர கணக்கானோர் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படி யாருக்கும் கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காகத் திருப்பதி தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஜனவரி 1-11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் செய்ய வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது.