Page Loader
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

எழுதியவர் Nivetha P
Dec 26, 2022
12:24 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில், கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 4,46,75,447 என கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

இந்தியாவில் 219.98 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

மேலும், கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3,767 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,663 ஆக உயர்ந்துள்ளது. அதனையடுத்து, கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,41,017 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 219.98 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் அனைத்தையும் அதிகாரப்பூர்வமாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.