Page Loader
ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மின் தடை ஏற்படும் அபாயம்?

ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மின் தடை ஏற்படும் அபாயம்?

எழுதியவர் Nivetha P
Dec 26, 2022
12:22 am

செய்தி முன்னோட்டம்

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வானது அறிவிக்கப்படாமல் உள்ளது. அதே போல் பணிக்கான காலியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசிடம் இதனை வலியுறுத்தி அவர்கள் அவ்வப்போது கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே கடந்த 2ம் தேதி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மின்வாரிய ஊழியர்கள் நூதன முறையில் பட்டை நாமம் அச்சிடப்பட்ட பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், மாநில அரசு இதனை கண்டுகொள்ளாத காரணத்தினால் தற்போது அவர்கள் ஜனவரி 10ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

வரும் டிசம்பர் 27ம் தேதி ஆயத்த விளக்கக் கூட்டம்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்

அதன்படி, காலி பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கவுள்ளதாக அந்த அறிவிப்பில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வேலை நிறுத்தத்தின் அவசரத்தை வலியுறுத்தி வரும் டிசம்பர் 27ம் தேதி ஆயத்த விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூறியுள்ளது. இதனையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தினால் மின் தடை அபாயம் ஏற்படுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.