
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
சென்னை சாலிகிராமம், கோயம்பேடு போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தொழிலாளர் உதவி ஆய்வாளர், ஆபரேஷன் ஸ்மைலி குழு மற்றும் தன்னார்வ குழு இணைந்து புகார் அளிக்கப்பட்ட இடத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வினை மேற்கொண்டனர்.
இது குறித்து, தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் ஓர் செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளார்.
"ஆய்வு குழுவினர் புகார் அளிக்கப்பட்ட இடத்திற்க்கு சென்று ஆய்வு செய்ததில் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு குழந்தை நல குழுவினரிடம் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வேலை அளித்தவர்வர்கள் மீது தொழிலாளர் உதவி ஆய்வாளர் து.நீ.பாலாஜி அவர்கள் சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்" என்று கூறியுள்ளார்.
அபராதம் மற்றும் சிறைத்தண்டனை அளிக்கப்படும்
சிறுவர்களை பணியமர்த்தினால் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை
"14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை பணியில் அமர்த்துவது பெரும் குற்றம் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை பணியில் அமர்த்திய 3 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை மீறி சிறுவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
மேலும், நீதிமன்றம் மூலம் அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிரைத்தண்டனை, அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.