ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ
அர்ஜென்டினா, சீனா, பிரேசில், தென் கொரியா, துருக்கி, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, மெக்சிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளை கொண்டது தான் ஜி 20 அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் இதிலுள்ள உறுப்பு நாடுகளின் ஏற்பாடு பேரில் நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு இந்தியாவில் ஜி 20 மாநாடு நடக்கவுள்ளது. வரும் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட கூடாது என்று மத்திய அரசு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் ஹனுமன் கோயில் அருகே காஷ்மீரே கேட் ஐஎஸ்பிடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் வசித்து வருகிறார்கள்.
1000க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-இரவு தங்கும் விடுதிகளில் மாற்ற முடிவு
இந்நிலையில் டெல்லி உச்சி மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள 1000 பிச்சைக்காரர்களை வெளியேற்ற முடிவு செய்து, அவர்களை வேறு இடத்திற்க்கு மாற்றும் பணிகள் துவங்கவுள்ளது என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் பிச்சைக்காரர்களை இரவில் தங்கும் விடுதிகளுக்கு மாற்ற நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், வீடுகள் இல்லாதோர் நலனுக்கான தொண்டு நிறுவனம் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, டெல்லிநகர தங்குமிட மேம்பாட்டு அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், "பிச்சைக்காரர்கள் டெல்லியில் கடும் பனியில் அவதிப்படுகிறார்கள், உணவு இல்லாமல் தவிக்கிறார்கள். இவர்களை அரசு காப்பகத்திற்கு அழைத்து சென்று தேவையானவற்றை வழங்க அரசு முடிவு செய்துள்ளது" என்று கூறியுள்ளனர்.