விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

கோவில் கட்ட ரூ.11 லட்சத்தை வாரி வழங்கிய இந்திய இளம் கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிங்கு சிங், உத்தரபிரதேசத்தில் கோவில் கட்டுவதற்காக ரூ.11 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு

சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Asian Games : இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கம் கொடுத்தது முறையல்ல; ஆப்கான் வீரர் ஏமாற்றம்

ஆப்கான் கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபரீத் மாலிக், ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா தங்கம் வென்றதை விமர்சித்துள்ளார்.

நவீன்-உல்-ஹக்கை ட்ரோல் செய்த ரசிகர்கள்; தடுத்து நிறுத்திய விராட் கோலி; வைரலாகும் காணொளி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஐபிஎல் 2023 சீசனில் தொடங்கிய ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக்குடனான சண்டையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முடிவுக்கு கொண்டுவந்தார்.

Sports RoundUp : உலகக்கோப்பையில் இந்தியா அபார வெற்றி; சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித்; மேலும் பல முக்கிய செய்திகள்

புதன்கிழமை (அக்.11) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

INDvsAFG : அபார வெற்றி பெற்ற இந்திய அணி; புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்

புதன்கிழமை (அக்டோபர் 11) நடைபெற்ற ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள்; டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்களை அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 1,000 ரன்களை எட்டி ரோஹித் ஷர்மா சாதனை

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 1,000 ரன்களை எட்டிய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

INDvsAFG : ஜஸ்ப்ரீத் பும்ரா அபார பந்துவீச்சு; இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் புதன்கிழமை (அக்டோபர் 11) நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 273 ரன்களை ஆப்கான் கிரிக்கெட் அணி நிர்ணயித்துள்ளது.

இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் பல்பீர் சிங் சீனியரின் 100வது பிறந்த தினம் இன்று

இந்திய ஹாக்கி அணியின் பொற்காலம் என 1928 முதல் 1956 வரையிலான காலகட்டம் கருதப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த இந்திய கிரிக்கெட் அணி; வைரலாகும் புகைப்படம்

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 10) அவரை சந்தித்தனர்.

INDvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

புதன்கிழமை (அக்டோபர் 11) டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற உள்ளது.

அகமதாபாத் செல்லும் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா?

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில் சிகிச்சை மற்றும் குணமடைவதற்காக சென்னையில் தங்கியிருந்த நிலையில், இன்று (அக்.11) அகமதாபாத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பிறந்த தினம் இன்று

பயங்கரமான சிக்ஸர்களை அடிப்பது முதல் நெருக்கடியான சூழ்நிலைகளில் விக்கெட்டுகளை எடுப்பது வரை, ஹர்திக் பாண்டியா மிக குறுகிய காலத்தில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டார்.

2028 யூரோ சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நாடாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தேர்வு

ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து கூட்டமைப்பு 2028 யூரோ சாம்பியன்ஷிப்பை நடத்தும் நாடுகளாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்காக பவுண்டரி லைன் மாற்றப்பட்டதா? சர்ச்சையைக் கிளப்பும் ரசிகர்கள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் செவ்வாய்க்கிழமை (அக்.10) நடந்த போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்திருந்தாலும், போட்டியில் ஒரு சர்ச்சையும் வெடித்துள்ளது.

INDvsAFG : டெல்லி அருண் ஜெட்லீ மைதானம் இந்தியாவுக்கு சாதகமா? கடந்த கால புள்ளி விபரங்கள்

2023 ஒருநாள் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக த்ரில் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, தனது இரண்டாவது போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணியை புதன்கிழமை டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் எதிர்கொள்கிறது.

ஒருநாள் உலகக்கோப்பை : சாதனை மழையால் நிரம்பி வழிந்த பாகிஸ்தான் vs இலங்கை போட்டி

செவ்வாய்க்கிழமை (அக்.10) நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையேயான போட்டி, ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

Sports RoundUp: பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய ஜோடி முதலிடம்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சாதனையைத் தொடர்ந்து, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தை எட்டிய முதல் ஜோடி என்ற சாதனை படைத்துள்ளது.

PAKvsSL: உலகக்கோப்பைத் தொடரில் இரண்டாவது போட்டியையும் வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்!

ஒருநாள் உலகக்கோப்பைத் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

ENG vs BAN: நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இங்கிலாந்து!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏழாவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தார்.

உலகக்கோப்பை Pak vs Sl: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பை, Eng vs Ban: முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேசம்

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் ஏழாவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

Sports Round Up: நெதர்லாந்தை வென்ற நியூசிலாந்து; ஒலிம்பிக்ஸ் தொடரில் கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்!

நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில், நேற்று நடைபெற்ற ஆறாவது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்டது நியூசிலாந்து அணி. முதல் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.

Nz vs Ned: 99 ரன்கள் வித்தியாசத்தில் இலகுவாக நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன.

ஒருநாள் உலக கோப்பை, NZ vs NED: டாஸை வென்ற பந்துவீச்சைத் தேர்வு செய்த நெதர்லாந்து அணி!

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய கிரிக்கெட் அணி.

Sports RoundUp: கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; தொடர்ந்து 3வது பார்முலா-1 பட்டம் வென்ற மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோசமான சாதனை படைத்த இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக்கவுட் ஆகி 40 ஆண்டுகளுக்கு முந்தைய மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர்.

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட் எடுத்து மிட்செல் ஸ்டார்க் சாதனை

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் இஷான் கிஷனின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.

INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : 36 ஆண்டுகால சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 36 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய வீரரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

INDvsAUS : இந்தியாவின் சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா; 199 ரன்களுக்கு ஆல் அவுட்

ஞாயிற்றுக்கிழமை (அக்.8) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவின் சுழலில் சிக்கி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போட்டிக்கட்டணத்தை நன்கொடையாக வழங்கிய ஆப்கான் வீரர் ரஷீத் கான்

2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷீத் கான், ஒருநாள் உலகக்கோப்பைக்கான தனது போட்டிக் கட்டணம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் ஐந்தாவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ODI World Cup : முதல் போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதி செல்வது உறுதி; எப்படி தெரியுமா?

2023 ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி நடைபெற உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று சென்னை மெட்ரோவில் இலவச பயணம்

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் போட்டி நடைபெற உள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டிக்கு மழையால் பாதிப்பா? வானிலை முன்னறிவிப்பு இதுதான்

அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Sports Headlines : ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா; மேலும் பல முக்கிய செய்திகள்

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சனிக்கிழமை (அக்டோபர் 7) 107 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது. இதில் 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் அடங்கும்.

SAvsSL : 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நான்காவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.