ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள்; டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்களை அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார்.
புதன்கிழமை (அக்.11) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா சதமடித்ததன் மூலம் இந்த சாதனையை செய்துள்ளார்.
2015 ஒருநாள் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ரோஹித், 2019 சீசனில் ஐந்து சதங்களை அடித்தார்.
இதன் மூலம், அதிக சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் ஷர்மா சமன் செய்திருந்த நிலையில், இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம், சச்சினை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த போட்டியில், ரோஹித் ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 1,000 ரன்களை எட்டிய வீரர் என்ற டேவிட் வார்னரின் சாதனையையும் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதமடித்து ரோஹித் ஷர்மா சாதனை
Topping The Charts! 🔝
— BCCI (@BCCI) October 11, 2023
Most Hundreds (7️⃣) in ODI World Cups 🤝 Rohit Sharma
Take a bow! 🙌 #CWC23 | #TeamIndia | #INDvAFG | #MeninBlue pic.twitter.com/VlkIlXCwvA