Page Loader
சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு
சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு

சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2023
11:00 am

செய்தி முன்னோட்டம்

சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்புள்ள நிறுவனங்கள் வரும் நவம்பர் 14ஆம் தேதிக்குள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ டெண்டர் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, 2022 ஏப்ரலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் உலகத் தரத்திலான கட்டமைப்புகளுடன் சென்னை அருகே பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். பின்னர், 2023-24 பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அடுத்தகட்டமாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தமிழக வீரர்களை தயார் செய்வதற்கான களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க டெண்டர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு