
கோவில் கட்ட ரூ.11 லட்சத்தை வாரி வழங்கிய இந்திய இளம் கிரிக்கெட் வீரர்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிங்கு சிங், உத்தரபிரதேசத்தில் கோவில் கட்டுவதற்காக ரூ.11 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அலிகார் மாவட்டத்தில் உள்ள கமல்பூரில் உள்ள தனது குலதெய்வமான சவுத்ரி தேவி அம்மனுக்கு கோவில் கட்டுவதற்காக அவர் இந்த தொகையை வழங்கியுள்ளார்.
இந்த கோவிலின் கட்டுமான பணிகள் முடிந்து அக்டோபர் 16 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ள நிலையில், துலீப் டிராபியில் பங்கேற்க வேண்டி உள்ளதால், ரிங்கு சிங் அந்த சமயத்தில் கோவிலுக்கு வரமாட்டார் எனக் தெரிகிறது.
எனினும், தீபாவளி சமயத்தில் அவர் கோவிலுக்கு சென்று தனது குலதெய்வத்தின் ஆசியை பெறுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
Rinku Singh also donates to build hostel for homeless kids
கேட்பவர்களுக்கு வாரி வழங்கும் கருணை உள்ளம் கொண்ட ரிங்கு சிங்
தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு எப்போதும் உதவுவதை ரிங்கு சிங் வழக்கமாக கொண்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், ரிங்கு தனது சொந்த ஊரான அலிகாரில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒரு விடுதியையும் கட்டிக் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடர்ந்து இந்த விடுதியை கட்டியுள்ள அவர், மேலும் சிறுவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அங்கு உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த திட்டத்திற்கு மொத்தமாக ரூ.50 லட்சம் செலவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்தையும் ரிங்கு சிங்கே ஏற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, ரிங்கு சிங் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.