பாகிஸ்தான் அணிக்காக பவுண்டரி லைன் மாற்றப்பட்டதா? சர்ச்சையைக் கிளப்பும் ரசிகர்கள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் செவ்வாய்க்கிழமை (அக்.10) நடந்த போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்திருந்தாலும், போட்டியில் ஒரு சர்ச்சையும் வெடித்துள்ளது. போட்டியின் போது, ஹசன் அலியின் பந்துவீச்சில் குஷால் மெண்டிஸின் கேட்சை இமாம்-உல்-ஹக் பிடித்த போது, பவுண்டரி லைன் கயிறு எல்லைக்கு சற்று வெளியே தள்ளி இருந்தது என்றும், இதனால் தான் இமாம்-உல்-ஹக் சிக்ஸர் செல்ல வேண்டிய பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்க முடிந்தது என்று கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு ஆதாரமாக, பவுண்டரி லைன் கயிற்றை தள்ளி வைத்ததன் காரணமாக, சற்று நிறமற்றதாகத் தோன்றிய ஒரு புல்வெளியை அவர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், இது குறித்து ஐசிசியிடம் இருந்து அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் வரவில்லை.