பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த இந்திய கிரிக்கெட் அணி; வைரலாகும் புகைப்படம்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 10) அவரை சந்தித்தனர். அப்போது, முதல் முறையாக இந்த போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி சார்பாக அனைத்து வீரர்களும் கையெழுத்திட்ட பேட்டை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணி பிரதமருக்கு வழங்கியது. தொடர்ந்து, வீரர்களிடம் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டீர்களா, மேலும் தங்கம் வெல்ல, அடுத்து என்ன செய்ய வேண்டும்? கிராமப்புறங்களில் இருந்து அதிக அளவில் வீரர்களை அழைத்து வர என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்தார். இந்நிலையில், மோடிக்கு கிரிக்கெட் வீரர்கள் பேட்டை பரிசளிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.