Page Loader
ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட் எடுத்து மிட்செல் ஸ்டார்க் சாதனை
ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட் எடுத்து மிட்செல் ஸ்டார்க் சாதனை

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட் எடுத்து மிட்செல் ஸ்டார்க் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 08, 2023
07:50 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் இஷான் கிஷனின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். இஷான் கிஷனின் விக்கெட் ஒருநாள் உலகக்கோப்பையில் மிட்செல் ஸ்டார்க்கிற்கு 50வது விக்கெட்டாகும். 941 பந்துகளில் இந்த விக்கெட்டை எடுத்ததன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில், 1,187 பந்துகளுடன் மலிங்கா இரண்டாவது இடத்திலும், 1,540 பந்துகளுடன் மெக்ராத் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Mitchell Starc becomes fastest player to score 50 scalps

இந்திய சுழலில் சுருண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய சுழலில் சிக்கி ரன் குவிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், இதன் மூலம், 1987 உலகக்கோப்பையில் மணிந்தர் சிங்கிற்கு பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் உலகக்கோப்பையில் மூன்று விக்கெட் எடுத்த முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கிடையே, 200 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்தடுத்து டக்கவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். விராட் கோலியும், கேஎல் ராகுலும் நிலைத்து நின்று அணியை மீட்டெடுத்து வருகின்றனர்.