Page Loader
ஒருநாள் உலகக்கோப்பையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோசமான சாதனை படைத்த இந்தியா
ஒருநாள் உலகக்கோப்பையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோசமான சாதனை படைத்த இந்தியா

ஒருநாள் உலகக்கோப்பையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோசமான சாதனை படைத்த இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Oct 08, 2023
08:30 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக்கவுட் ஆகி 40 ஆண்டுகளுக்கு முந்தைய மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர். முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 199 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராஷித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் டக்கவுட் ஆகி 1983இல் இந்தியா செய்த மோசமான சாதனையை சமன் செய்தனர்.

after 1983, Indian openers duck out in odi world cup first time

1983இல் நடந்தது என்ன?

1983 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி ஆகிய இருவரும் டக்கவுட் ஆகி வெளியேறினர். அதன் பின்னர் தற்போதுதான் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவின் தொடக்க வீரர்கள் டக்கவுட் ஆகினர். 1983 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அவுட்டாகி வெளியேறினாலும், கபில்தேவ் 175 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியர் ஒருவர் சதமடித்ததும் இந்த போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.