
இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டிக்கு மழையால் பாதிப்பா? வானிலை முன்னறிவிப்பு இதுதான்
செய்தி முன்னோட்டம்
அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நிலையில், முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டிக்கு மழையால் பாதிப்பு ஏற்படுமா என்ற பதற்றம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதற்கு கரணம், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை நடைபெற்ற ஏழு பயிற்சி ஆட்டங்களில் மழை காரணமாக நான்கு போட்டிகள் ஒரு பந்துகூட வீசப்படாமலேயே முடிக்கப்பட்டது.
Weather report for INDvsAUS match
மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்?
பயிற்சி ஆட்டங்களை மழை பாதித்தாலும், அக்டோபர் 5ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை தொடங்கியதில் இருந்து நான்கு போட்டிகளிலும் மழை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
எனினும், சென்னையில் சனிக்கிழமை சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது அச்சத்தை ஏற்படுத்தயுள்ளது.
வானிலை முன்னறிவிப்பின்படி, சென்னையில் காலை மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் சிறிது இருந்தாலும், அது பின்னர் படிப்படியாக குறைந்து போட்டிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகம் முழுவதும் மழைக்கான வாய்ப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால், அது சென்னையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
அப்படி ஒருவேளை மழை அதிகம் பெய்து போட்டி கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.