Page Loader
ODI World Cup : முதல் போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதி செல்வது உறுதி; எப்படி தெரியுமா?

ODI World Cup : முதல் போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதி செல்வது உறுதி; எப்படி தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 08, 2023
01:02 pm

செய்தி முன்னோட்டம்

2023 ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியை வென்று தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பதில் இரு அணிகளும் உறுதியாக உள்ளன. இந்நிலையில், இதற்கு முன்பு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில், இந்தியா தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு முறையும் அரையிறுதிக்கு முன்னறியுள்ளதால், இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றிகரமான ஆரம்பம் மிகவும் சிறப்பானது.

why first match win special for india in odi world cup

ஏழு முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்தியா

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் ஏழு முறை இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. மேலும் ஆறு முறை உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆறு முறையும் குறைந்தபட்சம் அரையிறுதியை எட்டியுள்ளது. 1983இல், இந்திய அணி தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸைத் தோற்கடித்து வெற்றிகரமாக தொடங்கியதோடு, அந்த தொடரில் தனது முதல் பட்டத்தையும் வென்றது. அதன் பிறகு 1996, 2003, 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதியை எட்டியுள்ளது. இதில் 2003இல் இறுதிப்போட்டி வரை முன்னேறியதோடு, 2011இல் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. இவைதவிர, 1987இல் தனது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவி இருந்தாலும், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.