2028 யூரோ சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நாடாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தேர்வு
ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து கூட்டமைப்பு 2028 யூரோ சாம்பியன்ஷிப்பை நடத்தும் நாடுகளாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், இத்தாலி மற்றும் துருக்கி ஆகியவை 2032 போட்டியை நடத்தும் நாடுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, யூரோ சாம்பியன்ஷிப் 2028ஐ நடத்த துருக்கி திட்டமிட்டிருந்த நிலையில், போட்டியில் இருந்து விலகி, 2032 சீசனை இத்தாலியுடன் சேர்ந்து நடத்த முன்மொழிந்தது. இதையடுத்து செவாய்க்கிழமை (அக்டோபர் 10) நடந்த ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து கூட்டமைப்பு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் தொடங்க உள்ள யூரோ 2024க்கான ஐரோப்பிய தகுதிச் சுற்று போட்டிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது ஜெர்மனியில் 10 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் 2028 யூரோ சாம்பியன்ஷிப்
2028 யூரோ சாம்பியன்ஷிப் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் முதல் கூட்டாக நடத்தப்படும் பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வாக இருக்கும். இந்த போட்டி லண்டனின் வெம்ப்லி, கார்டிஃப்ஸ் நேஷனல் ஸ்டேடியம் ஆஃப் வேல்ஸ், கிளாஸ்கோவின் ஹாம்ப்டன் பார்க் மற்றும் டப்ளினில் உள்ள அவிவா ஸ்டேடியம் போன்ற முக்கிய அரங்குகள் உட்பட 10 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படும். 2032 போட்டிக்கான தயாரிப்பில், இத்தாலி மற்றும் துருக்கி ஆகியவை 20 மைதானங்களைத் தேர்ந்தெடுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து கூட்டமைப்பின்படி, இந்த பட்டியல் இறுதியில் அக்டோபர் 2026க்குள் ஒரு நாட்டிற்கு ஐந்தாக குறைக்கப்படும். இத்தாலி இந்த மதிப்புமிக்க போட்டியை இதற்கு முன்பு பலமுறை நடத்தியிருந்தாலும், துருக்கி முதன்முறையாக யூரோ போட்டிகளை 2032இல் நடத்த தயாராக உள்ளது.