விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இரண்டாவது சுற்று ஆட்டமும் டிரா

பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் மோதிய செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது.

23 Aug 2023

ஐசிசி

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய ஷுப்மன் கில்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இந்தியாவின் ஷுப்மன் கில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.

2019இல் தோனி, 2024இல் டெண்டுல்கர்; இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேசிய அடையாளம்

கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரை, தேசிய அடையாளமாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

IND vs IRE 3வது டி20 போட்டி : பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்குமா இந்தியா?

ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்துடன் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) டப்ளினில் மோதுகிறது.

உலகக்கோப்பையில் விராட் கோலியை பலிகடாவாக்கும் முயற்சி; ரவி சாஸ்திரியின் யோசனைக்கு எதிர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை நம்பர் 4 இடத்தில் இறக்கலாம் என ஆலோசனை வழங்கிய ரவி சாஸ்திரியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

செஸ் உலகக்கோப்பையில் பிரக்ஞானந்தாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு? காரணம் இதுதான்

செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தாவுக்கு எதிராக விளையாடும் மேக்னஸ் கார்ல்சன் உணவு சேராததால் வயிற்றுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டில் பாலின சமத்துவம்; இந்தியாவை பின்பற்றி தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு

கிரிக்கெட்டில் பாலின பாகுபாட்டை போக்கும் வகையில், ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே போட்டிக் கட்டணத்தை வழங்குவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் கேப்டன் உயிருடன் உள்ளார்; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒலங்கா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 49 வயதான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) காலமானதாக தகவல் வெளியான நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் டிரா; இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) நடந்த FIDE செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்ததது.

ஆசியக் கோப்பை வீரர்களின் தேர்வு குறித்த ரசிகரின் கேள்விக்கு லைவ்-ஷோவில் கொந்தளித்த கவாஸ்கர்

ஆறு ஆசிய நாடுகள் பங்குபெறும் 2023 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி இலங்கையில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டது பிசிசிஐ.

செஸ் உலகக் கோப்பை: கேண்டிடேட்ஸ் போட்டியை அடைந்த மூன்றாவது இளைஞர் பிரக்ஞானந்தா 

இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, 2023 செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

திலக் வர்மாவை சேர்த்தது துணிச்சலான முடிவு; இந்திய அணியின் தேர்வுக்கு டாம் மூடி பாராட்டு

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி, 2023 ஆசிய கோப்பைக்கு திலக் வர்மா இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது துணிச்சலான முடிவு என்று பாராட்டினார்.

ஜுனியர் ஹாக்கி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 21) நடைபெற்ற 4 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஹாக்கி டஸ்ஸெல்டார்ஃப் தொடரில் இந்திய ஹாக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது.

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் லக்ஷ்யா சென், பிரணாய் எச்.எஸ். 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பதினொன்றாம் நிலை வீரரான லக்ஷ்யா சென் 2023 BWF உலக சாம்பியன்ஷிப்பில் மொரீஷியஸின் ஜார்ஜஸ் ஜூலியன் பாலை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

'சூரியனை மேகங்கள் மறைத்தாலும்'; வைரலாகும் யுஸ்வேந்திர சாஹலின் பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், ஆசிய கோப்பை 2023க்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 21) எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்; 2024 ஒலிம்பிக்கிற்கு இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் தகுதி

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சுடும் வீரர் அகில் ஷியோரன் ஆடவர் 50மீ வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஆசிய கோப்பைக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹலை புறக்கணித்தது ஏன்? ரோஹித் ஷர்மா விளக்கம்

2023 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா கூட்டாக திங்கள்கிழமை (ஆகஸ்ட் 21) அறிவித்தனர்.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

44 பட்டங்களுடன் கால்பந்து உலகில் யாரும் செய்யாத சாதனையை செய்த லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகி, சமீபத்தில் அமெரிக்காவின் இன்டர்மியாமி அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.

பிபா உலகக்கோப்பை வென்றதை பார்க்காமலேயே மறைந்த தந்தை; ஸ்பெயின் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) இங்கிலாந்துக்கு எதிரான பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.

ஆசிய கோப்பை தொடக்க விழாவுக்கு ஜெய் ஷா செல்கிறாரா? பிசிசிஐ கூறுவது இதுதான்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷாவை 2023 ஆசிய கோப்பை தொடக்க போட்டிக்கு விருந்தினராக பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.

பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது ஸ்பெயின்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்ற பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

INDvsIRE 2வது டி20 : கெய்க்வாட் அரைசதத்தால் இந்தியாவுக்கு வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20யில் இந்திய கிரிக்கெட் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவின் லீக்ஸ் கோப்பையை வென்ற லியோனால் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி

அமெரிக்காவின் லீக்ஸ் கோப்பை (Leagues Cup) கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அமெரிக்காவின் இரண்டு 'மேஜர் லீக் சாக்கர்' மற்றும் 'லிகா MX' ஆகிய கால்பந்து தொடர்களில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் லீக்ஸ் கோப்பையில் இந்த ஆண்டு பங்குபெற்றன.

ரசிகர்களே ரெடியா? ஒருநாள் உலகக்கோப்பை மஸ்கட்டிற்கு பெயர் வைக்க ஐசிசி அழைப்பு

சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 19) 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான மஸ்கட்டை ஐசிசி வெளியிட்டது.

பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : வெண்கலம் வென்றது ஸ்வீடன் கால்பந்து அணி

பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் ஸ்வீடன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு; புதிய சாதனைக்கு தயாராகும் மஹிகா கவுர்

இலங்கைக்கு எதிராக உள்நாட்டில் நடக்கவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான மகளிர் கிரிக்கெட் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட தீ மிதித்த வங்கதேச கிரிக்கெட் வீரர் முகமது நயீம்

ஆசிய கோப்பை 2023 இன்னும் 10 நாட்களில் தொடங்கும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் முகமது நயீம் மேற்கொண்ட ஒரு பயிற்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்று பும்ரா சாதனை

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அயர்லாந்து கிரிக்கெட் அணியை டக்வொர்த் லூயிஸ் (டிஎல்எஸ்) முறையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

INDvsIRE முதல் டி20: மழையால் பாதியில் நின்ற ஆட்டம்; டிஎல்எஸ் முறையில் இந்தியா வெற்றி

இந்தியா அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் மோதிய முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் (டிஎல்எஸ்) முறைப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

'தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங்'; ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு வேற லெவல் வரவேற்பு கொடுத்த ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளார்.

IND vs IRE முதல் டி20 : டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) தொடங்க உள்ளது.

துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஜோடி

அஜர்பைஜானின் பாகுவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடி தங்கம் வென்றது.

கவுதம் காம்பிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலக முடிவு என தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024க்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியில் இருந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பிர் வெளியேற தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஆர்.பிரக்ஞானந்தா

இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய கூடைப்பந்து அணி

வியாழன் அன்று (ஆகஸ்ட் 17) சிரியாவின் டமாஸ்கஸில் பஹ்ரைனுக்கு எதிராக நடந்த கூடைப்பந்து போட்டியில் 66-79 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

ஜெயிலர் படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசித்த ரொனால்டோ; வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தை பார்க்க கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ குடும்பத்துடன் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்ட இந்திய முன்னணி வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததற்காக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை வெள்ளி வென்ற தடகள வீராங்கனை டூட்டி சந்திற்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக வில்வித்தை போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா

பாரிஸில் நடந்த வில்வித்தை உலகக்கோப்பையில் இந்திய ரிகர்வ் அணி பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது.

யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக்

இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை ப்ரியா மாலிக், யு20 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.