NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய கோப்பை தொடக்க விழாவுக்கு ஜெய் ஷா செல்கிறாரா? பிசிசிஐ கூறுவது இதுதான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய கோப்பை தொடக்க விழாவுக்கு ஜெய் ஷா செல்கிறாரா? பிசிசிஐ கூறுவது இதுதான்
    ஆசிய கோப்பை தொடக்க விழாவுக்கு ஜெய் ஷா செல்கிறாரா?

    ஆசிய கோப்பை தொடக்க விழாவுக்கு ஜெய் ஷா செல்கிறாரா? பிசிசிஐ கூறுவது இதுதான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 21, 2023
    12:07 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷாவை 2023 ஆசிய கோப்பை தொடக்க போட்டிக்கு விருந்தினராக பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.

    பிசிசிஐ செயலாளராக மட்டுமல்லாது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் ஜெய் ஷா உள்ளார்.

    ஆகஸ்ட் 30 அன்று முல்தானில் நடக்கும் ஆசிய கோப்பையின் தொடக்க போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், ஆசிய கோப்பையின் தொடக்க போட்டியில் பங்கேற்க ஜெய் ஷாவைத் தவிர, ஆசியக் கோப்பை 2023 தொடக்கப் போட்டிக்கான அழைப்பிதழ்களை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.

    bcci to decide participation in asian cup inaguration

    பாகிஸ்தான் அழைப்புக்கு பிசிசிஐயின் முடிவு என்ன?

    முன்னதாக, ஆசிய கோப்பை 2023 தொடர் முழுமையாக பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்ததை அடுத்து போட்டி ஹைபிரிட் முறைக்கு மாற்றப்பட்டது.

    இதன்படி, போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளன.

    இந்தியாவின் முடிவால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஜெய் ஷாவை பாகிஸ்தானுக்கு அழைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெய் ஷாவை அழைப்பதன் மூலம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களை அரசியலுடன் விளையாட்டை கலக்காத ஒருவராக காட்ட விரும்புவதாக இது பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பிசிசிஐ தரப்பில் தங்களுக்கு அழைப்பிதழ் வந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    பிசிசிஐ

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஆசிய கோப்பை

    ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு! இந்திய அணி
    ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு! கிரிக்கெட்
    ஆசிய கோப்பையை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தயார் என தகவல்! இலங்கை கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா! ஹாக்கி போட்டி

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    இந்தியாவில் தான் ஒருநாள் உலகக்கோப்பை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி பேச்சுவார்த்தை! ஒருநாள் உலகக்கோப்பை
    ஆசிய கோப்பையை வேறு நாட்டுக்கு மாற்றினால் தொடரிலிருந்து வெளியேற பாகிஸ்தான் முடிவு! ஆசிய கோப்பை
    அகமதாபாத்தில் மட்டும் வேண்டாம்! ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வர பாகிஸ்தான் சம்மதம்? ஒருநாள் கிரிக்கெட்
    சென்னை, பெங்களூரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு கிரிக்கெட்

    பிசிசிஐ

    தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு! கிரிக்கெட்
    'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன் ஐபிஎல்
    டிஎன்பிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர், டிஆர்எஸ் விதிகள் அறிமுகம்! டிஎன்பிஎல்
    இந்திய அணிக்கு மூன்று விதமான ஜெர்சிக்களை அறிமுகம் செய்தது பிசிசிஐ! இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025