Page Loader
ஜெயிலர் படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசித்த ரொனால்டோ; வைரலாகும் புகைப்படம்
ஜெயிலர் படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசித்த ரொனால்டோ

ஜெயிலர் படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசித்த ரொனால்டோ; வைரலாகும் புகைப்படம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 18, 2023
03:43 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தை பார்க்க கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ குடும்பத்துடன் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது துபாயில் இருக்கும் ரொனால்டோ, தி ரெனைசன்ஸ் மல்டிப்ளெக்ஸ் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்றிருக்கும் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அங்கு ஜெயிலர் படம் திரையிடப்பட்டுள்ள நிலையில், ரொனால்டோ குடும்பத்துடன் ஜெயிலர் படத்தை கண்டு ரசித்ததாகக் கூறப்படுகிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ள நிலையில், ரொனால்டோ குடும்பத்துடன் தியேட்டரில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கிடையே, இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்துள்ள ஜெயிலர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் வெளியாகி ஏழு நாட்களில் ரூ.450 கோடி வசூல் செய்துள்ளது.

Instagram அஞ்சல்

ரொனால்டோவின் இன்ஸ்டா பதிவு