இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு; புதிய சாதனைக்கு தயாராகும் மஹிகா கவுர்
செய்தி முன்னோட்டம்
இலங்கைக்கு எதிராக உள்நாட்டில் நடக்கவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான மகளிர் கிரிக்கெட் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் 17 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் மஹிகா கவுர் சேர்க்கப்பட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னாள் வீராங்கனையான மஹிகா, ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் அந்த நாட்டு அணிக்காக விளையாடியுள்ளார்.
அந்த அணிக்காக மொத்தம் 19 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ள மஹிகா, 5.15 என்ற எகானமி விகிதத்தில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடும் லெவனில் இடம்பெறும் மஹிகா கவுர் இந்த சாதனையை செய்வார்.
player list who played for two nations
இரு நாடுகளுக்கான விளையாடிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் பட்டியல்
தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் மகளிர் டி20 அணிகளில் மஹிகா சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் அவர் இருநாடுகளும் விளையாடிய ஒன்பதாவது வீராங்கனை என்ற சிறப்பை பெற உள்ளார்.
மஹிகா கவுருக்கு முன்னதாக எட்டு பேர் மகளிர் கிரிக்கெட்டில் இரு நாடுகளுக்காக விளையாடியுள்ளனர். அவர்களின் பட்டியல் பின்வருமாறு:-
நிக்கோலா பெய்ன் (நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து)
ரோவன் மில்பர்ன் (நெதர்லாந்து, நியூசிலாந்து)
பெர்னாடின் பெசுய்டன்ஹவுட் (தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து)
கிம் கார்த் (அயர்லாந்து, ஆஸ்திரேலியா)
சமானி செனவிரத்னா (இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்)
தீபிகா ரசங்கிகா (இலங்கை மற்றும் பஹ்ரைன்)
கேண்டசி அட்கின்ஸ் (மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா)
மகேவிஷ் கான் (பாகிஸ்தான் மற்றும் கனடா).