
44 பட்டங்களுடன் கால்பந்து உலகில் யாரும் செய்யாத சாதனையை செய்த லியோனல் மெஸ்ஸி
செய்தி முன்னோட்டம்
லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகி, சமீபத்தில் அமெரிக்காவின் இன்டர்மியாமி அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.
மேலும், அணியின் கேப்டனாக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடந்த லீக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.
இதன் மூலம், கால்பந்து விளையாட்டில் மெஸ்ஸி தனது 44 வது கோப்பையை வென்று புதிய சாதனை படைத்தார்.
மெஸ்ஸி கிளப் போட்டிகளில் இதுவரை 39 கோப்பைகளை வென்றுள்ளார். மேலும், தனது தேசிய அணியான அர்ஜென்டினாவுக்காக 2022 பிபா உலகக்கோப்பை உட்பட 5 பட்டன்களை வென்றுள்ளார்.
இதன் மூலம் உலகில் அதிக கால்பந்து பட்டங்களை வென்ற முன்னாள் பார்சிலோனா அணி வீரர் டானி ஆல்வ்ஸை (43) பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்றுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
44 பட்டங்களை கைப்பற்றிய லியோனல் மெஸ்ஸி
🏆 Congrats to Leo Messi for becoming the joint most decorated footballer of all time!
— FC Barcelona (@FCBarcelona) August 20, 2023
44 Trophies. Proud to be part of this incredible story. 🐐💙❤️ pic.twitter.com/ELt30oZxsb