செஸ் உலகக் கோப்பை: கேண்டிடேட்ஸ் போட்டியை அடைந்த மூன்றாவது இளைஞர் பிரக்ஞானந்தா
செய்தி முன்னோட்டம்
இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, 2023 செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
டை-பிரேக் மூலம் 3.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில், உலகின் மூன்றாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி அவர் இறுதி சுற்றிற்கு முன்னேறினார்.
பிரக்ஞானந்தா, உலகின் முதல் நிலை வீரரும், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இறுதிப் போட்டியில் எதிர்கொள்வார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நிகழ்வான 'கேண்டிடேட்ஸ்' போட்டிக்கு தகுதி பெற்ற மூன்றாவது இளைஞர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
card 2
கேண்டிடேட்ஸ் டோர்னமென்ட் என்றால் என்ன?
கேண்டிடேட்ஸ் டோர்னமென்ட் என்பது உலக செஸ் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதி நிகழ்வாகும். FIDE உலகக் கோப்பையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்கள் கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கது.
எனவே, பிரக்ஞானந்தா இந்த நிலைக்குத் தகுதி பெற்றுள்ளார். கேண்டிடேட்ஸ் போட்டியின் வெற்றியாளர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு உலக செஸ் சாம்பியனை எதிர்கொள்கிறார். சீன கிராண்ட்மாஸ்டர் டிங் லிரன் தற்போது நடப்பு சாம்பியனாக உள்ளார்.
முன்னதாக நடந்த போட்டியில், பிரக்ஞானந்தா 5-4 என்ற கணக்கில் தனது சகநாட்டவரான எரிகைசி அர்ஜுனை தோற்கடித்து செஸ் உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன் விளைவாக, 'கிராண்ட் மாஸ்டர்' விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்தப் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது இந்தியரானார் இவர்.
ட்விட்டர் அஞ்சல்
கேண்டிடேட்ஸ் போட்டியை அடைந்த பிரக்ஞானந்தா
#JUSTIN | உலகக்கோப்பை செஸ்: இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா #FIDEWorldCup2023 | #FIDE | #FIDEWorldCup | #Praggnanandhaa | #FabianoCaruana pic.twitter.com/uplhzaf0xw
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 21, 2023