விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

காஷ்மீர் பெண்ணை திருமணம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் சர்ஃபராஸ் கான்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கான், ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

INDvsWI 2வது டி20 : சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் சாதனையை முறியடித்த திலக் வர்மா

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவினாலும், இளம் வீரர் திலக் வர்மா குறிப்பிடத்தக்க இரண்டு சாதனைகளை செய்துள்ளார்.

INDvsWI டி20: இரண்டாவது போட்டியிலும் தோல்வி; வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மோசமான சாதனை படைத்த இந்தியா

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) கயானாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

IND vs WI 2வது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடன் இந்தியா மோதும் இரண்டாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) நடக்க உள்ளது.

மேலும் ஒரு பாகிஸ்தான் போட்டிக்கு சிக்கல்; ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் கூடுதல் தாமதம் 

ஒருநாள் உலகக்கோப்பை 2023இன் திருத்தப்பட்ட போட்டி அட்டவணை வெளியிடுவதில் மேலும் தாமதம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ். தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரணாய் எச்.எஸ். தோல்வியடைந்தார்.

06 Aug 2023

சென்னை

சென்னையில் நடந்த பைக் ரேஸில் விபத்து; 13 வயது வீரர் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மரணம்

சென்னை இருங்காட்டுக்கோட்டையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) நடந்த தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் (NMRC) நடந்த விபத்தில் பைக் பந்தய வீரர் கொப்பரம் ஷ்ரேயாஸ் ஹரீஷ் உயிரிழந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவராக இன்சமாம்-உல்-ஹக் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் டெஸ்ட் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த கலைஞர் நினைவு மாரத்தான்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி கௌரவித்தார்.

தேசிய நண்பர்கள் தினம் : கிரிக்கெட் உலகின் டாப் 3 சிறந்த நண்பர்கள்

ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு தேசிய நண்பர்கள் தினமாக ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி தேசிய நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மைதானத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள்; பாதியில் நிறுத்தப்பட்ட டென்னிஸ் போட்டி

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரே மற்றும் டெய்லர் ஃபிரிட்ஸ் மோதிய காலிறுதிப் போட்டி போட்டி போராட்டக்காரர்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.

அலெக்ஸ் ஹேல்ஸ் போலி கணக்கில் வெளியிட்ட ட்விட்டர் பதிவால் இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்டர் அலெக்ஸ் ஹேல்ஸ் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

05 Aug 2023

பிசிசிஐ

இந்திய அணியின் ஊடக உரிமை ஏலம்; ரூ.8,200 கோடி வருவாயை எதிர்பார்க்கும் பிசிசிஐ

பிசிசிஐ மார்ச் 2028 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவின் 88 உள்நாட்டு போட்டிகளுக்கான தனி டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விற்பதன் மூலம் ரூ.8,200 கோடியை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

பெர்லினில் நடந்து வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 5) 17 வயதே ஆன இளம் வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி இந்தியாவுக்காக தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரணாய் எச்.எஸ். 

சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ்., இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

வீரர்களுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வை வழங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் வீரர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய ஊதிய உயர்வை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்' : பாகிஸ்தான் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி

சென்னையில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டியில் விளையாடி வரும் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் முகமது சக்லைன், இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர்

முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் சபா கரீம், 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு எம்எஸ் தோனியை அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி அணியில் சேர்க்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

தி ஹண்ட்ரேட் லீக் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா

தி ஹண்ட்ரேட் மகளிர் கிரிக்கெட் லீக் போட்டியில் 500 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.

கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்ட இந்தியா; டிராவில் முடிந்த ஹாக்கி போட்டி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் சீனாவை அபாரமாக வீழ்த்திய இந்தியா, தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானுடன் டிரா செய்தது.

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார் ஜோதி யர்ராஜி

இந்தியாவின் ஜோதி யர்ராஜி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) சீனாவின் செங்டுவில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தங்கம்

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்த உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023 இல் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு குட் நியூஸ்; மீண்டும் பயிற்சி முகாமில் இணைந்த கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 34 வயதான நட்சத்திர பேட்டர் அலெக்ஸ் ஹேல்ஸ், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி; காரணம் இதுதான்

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) டிரினிடாட்டில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அபராதம் விதித்துள்ளது.

தேசிய கீதம் இசைத்தபோது கண்ணீர் விட்டு அழுத ஹர்திக் பாண்டியா; வைரலாகும் புகைப்படம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

விஸ்வநாதன் ஆனந்தின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ்

உலகக் கோப்பை செஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1) பெற்ற வெற்றியின் மூலம், FIDE உலக செஸ் தரவரிசையில் இந்தியாவின் மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் 2023 : பிரணாய் எச்.எஸ்., பிரியன்ஸு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் பிரணாய் எச்.எஸ். மற்றும் பிரியன்ஸு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தமீம் இக்பால் விலகல்

வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் தமீம் இக்பால், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ஃப்ளவர் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி அடுத்த சீசனுக்கு தலைமைப் பயிற்சியாளராக ஆண்டி ஃப்ளவரை நியமித்துள்ளது.

INDvsWI முதல் டி20: இந்தியா அதிர்ச்சித் தோல்வி; காரணத்தை விளக்கிய ஹர்திக் பாண்டியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) இந்திய கிரிக்கெட் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி : சீனாவை வீழ்த்தி அசத்தலான வெற்றியுடன் தொடங்கியது இந்திய ஹாக்கி அணி

சென்னையில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் வியாழன் (ஆகஸ்ட் 3) அன்று ஆடவர் இந்திய ஹாக்கி அணி தனது முதல் போட்டியில் சீனாவுக்கு எதிராக அசத்தலான வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

INDvsWI முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் 2023 : நான்கு இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் BWF சூப்பர் 500 போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

'இந்திய டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டேன்' : இங்கிலாந்து வீரர் மொயீன் அலி உறுதி

இந்தியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தான் பங்கேற்கப்போவதில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரியின் 39வது பிறந்தநாள் இன்று; குவியும் வாழ்த்துக்கள்

இந்தியாவின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் முன்னணி ஸ்ட்ரைக்கர் சுனில் சேத்ரிக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) 39 வயதாகிறது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு; 200வது போட்டியில் விளையாடும் இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) பங்கேற்கிறது.

வீராங்கனைக்கு பதில் மருமகளை போட்டிக்கு அனுப்பிய சோமாலிய தடகள சம்மேளன தலைவி இடைநீக்கம்

சீனாவின் செங்டுவில் நடைபெற்று வரும் 31வது கோடைகால உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் சோமாலியாவைச் சேர்ந்த நஸ்ரா அபுகர் அலி பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார்.

WWE தலைவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

அமெரிக்காவில் உள்ள வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வின்ஸ் மக்மஹோனுக்கு கடந்த மாதம் ஒரு தேடல் வாரண்டுடன், கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனோஜ் திவாரி, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.