Page Loader
தேசிய கீதம் இசைத்தபோது கண்ணீர் விட்டு அழுத ஹர்திக் பாண்டியா; வைரலாகும் புகைப்படம்
தேசிய கீதம் இசைத்தபோது கண்ணீர் விட்டு அழுத ஹர்திக் பாண்டியா

தேசிய கீதம் இசைத்தபோது கண்ணீர் விட்டு அழுத ஹர்திக் பாண்டியா; வைரலாகும் புகைப்படம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 04, 2023
05:31 pm

செய்தி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இது இந்திய அணிக்கு 200வது டி20 போட்டியாகும். டி20 வரலாற்றில் 200 போட்டிகளில் பங்கேற்ற இரண்டாவது அணி என்ற பெருமையை இதன் மூலம் இந்தியா பெற்றது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் அணியை வழிநடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, தேசிய கீதம் இசைக்கப்படும் ஆனந்த கண்ணீர் விடும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும், இந்தியா தனது முதல், 50வது, 100வது மற்றும் 150வது போன்ற மைல்ஸ்டோன் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், 200வது போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Embed

கண்ணீர் விட்டு அழுத ஹர்திக் பாண்டியா

Hardik Pandya got emotional during the national anthem. pic.twitter.com/5VH2kM8cdf— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 3, 2023