தேசிய நண்பர்கள் தினம் : கிரிக்கெட் உலகின் டாப் 3 சிறந்த நண்பர்கள்
ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு தேசிய நண்பர்கள் தினமாக ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி தேசிய நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் சில கிரிக்கெட் நட்புகளை இதில் பார்க்கலாம். விராட் கோலி மற்றும் தோனி : தனது குழந்தை பருவ பயிற்சியாளர் மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மாவைத் தவிர தான் நேசிக்கும் மிகவும் முக்கியமான நபர் என எம்எஸ் தோனியை விராட் கோலி குறிப்பிடுகிறார். எம்எஸ் தோனியின் கீழ், விராட் கோலி 2008 இல் இலங்கைக்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமானார். மேலும், தான் எப்போதெல்லாம் நம்பிக்கை இழக்கிறேனோ அப்போதெல்லாம் தனக்கு உத்வேகம் அளிக்கும் நபராக தோனி இருப்பதாகக் கூறியுள்ளார்.
மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இடையேயான நட்பு
எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளனர். அவர்களது பந்தம் மிகவும் ஆழமானது. இதன் உச்சகட்டமாக, இருவரும் ஒரே நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். வேறு எந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் அவர்களைப் போன்ற பிணைப்பு இல்லை. விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் : ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் எப்படி சிறந்த நண்பர்கள் ஆனார்கள் என்று ஆச்சரியப்படலாம். ஆனால் ஐபிஎல்லில் இருவரும் ஆர்சிபி அணிக்காக 10 ஆண்டுகள் ஒன்றாக விளையாடினர். இதன் மூலம் கிரிக்கெட் கடந்தும் மிக நெருக்கமான பிணைப்பை கொண்டுள்ளனர்.