Page Loader
விஸ்வநாதன் ஆனந்தின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ்
விஸ்வநாதன் ஆனந்தின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ்

விஸ்வநாதன் ஆனந்தின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 04, 2023
04:47 pm

செய்தி முன்னோட்டம்

உலகக் கோப்பை செஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1) பெற்ற வெற்றியின் மூலம், FIDE உலக செஸ் தரவரிசையில் இந்தியாவின் மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி சாதனை படைத்துள்ளார். முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜானின் மிஸ்ரடின் இஸ்கந்தரோவை 44 நகர்த்தல்களில் வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதையடுத்து, குகேஷுக்கு உலக தரவரிசையில் ரேட்டிங் புள்ளிகள் தற்போது 2755.9 ஆக உள்ளது. இதன் மூலம் 2754.0 ரேட்டிங் புள்ளிகளை கொண்ட விஸ்வநாதன் ஆனந்தை விஞ்சி, தரவரிசையில் இந்தியர்களில் முதலிடம் பிடித்தார். மேலும் உலக அளவில் தரவரிசையில் குகேஷ் தற்போது 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

chief minister mk stalin wishes gukesh d

குகேஷின் சாதனைக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து

இந்தியாவின் மிகச்சிறந்த கிராண்ட்மாஸ்டர் என்று வர்ணிக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்த், 1987 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட அனைத்து தரவரிசைப் பட்டியல்களிலும் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்து வந்தார். மேலும் ஜூலை 1991இல் முதல் முறையாக உலக தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்தார். இந்நிலையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வநாதன் ஆனந்தை முறியடித்து குகேஷ் இந்திய அளவில் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கிடையே குகேஷின் சாதனைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது சாதனை இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒன்றாகவும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணமாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.