வீராங்கனைக்கு பதில் மருமகளை போட்டிக்கு அனுப்பிய சோமாலிய தடகள சம்மேளன தலைவி இடைநீக்கம்
சீனாவின் செங்டுவில் நடைபெற்று வரும் 31வது கோடைகால உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் சோமாலியாவைச் சேர்ந்த நஸ்ரா அபுகர் அலி பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார். இது தொடர்பாக வெளியான ஒரு காணொளியில், மற்ற வீராங்கனைகள் பந்தயத்திற்குத் தயாராகி, தொடக்கத்திற்கு முன்பே நிலைப்பாட்டை எடுத்தபோது, நஸ்ரா அதைச் செய்ய சிரமப்பட்டார். மேலும், பஸர் ஒலித்தபோது, மற்ற வீராங்கனைகள் மிகவும் விரைவாக ஓடிய நிலையில், நஸ்ரா அலி மிகவும் சிரமப்பட்டு நொண்டியடித்தபடி 21 வினாடிகளை எடுத்துக் கொண்டார். நஸ்ரா சோமாலி தடகள சம்மேளனத்தின் தலைவி காதிஜோ அடன் தாஹியின் மருமகள் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், சோமாலி தடகள சம்மேளனத்தின் தலைவியை இடைநீக்கம் செய்ததாக அறிவித்துள்ளது.