Page Loader
WWE தலைவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
WWE தலைவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

WWE தலைவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2023
04:21 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் உள்ள வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வின்ஸ் மக்மஹோனுக்கு கடந்த மாதம் ஒரு தேடல் வாரண்டுடன், கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள வருவாய் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தேடுதல் வாரண்ட் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டதற்கான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், வின்ஸ் மக்மஹோனிடம், தன்னுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் விசாரணையின் விளைவாக இந்த நடவடிக்கை வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், வின்ஸ் மக்மஹோன் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிய வருகிறது.

WWE Executive chairman goes in medical leave

மருத்துவ விடுப்பில் சென்ற வின்ஸ் மக்மஹோன்

மக்மஹோன் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திலிருந்து மருத்துவ விடுப்பு எடுப்பதாக நிறுவனத்தின் சிஇஓ நிக் கான் நேற்று (ஆகஸ்ட் 2) அறிவித்திருந்தார். மக்மஹோன் முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்தது. 77 வயது முதியவரின் விடுப்பு ஜூலை 21 முதல் தொடங்கியதாக நம்பப்படுகிறது. இருப்பினும், மக்மஹோனின் விடுப்பு காலம் எதுவரை என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே, ஒரு புதிய நிறுவனத்தை அமைப்பதற்காக வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் எண்டெவர் குழுமத்திற்கு சொந்தமான யுஎப்சி உடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் நிறுவனம் எண்டெவர் குழுமத்தால் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.