மைதானத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள்; பாதியில் நிறுத்தப்பட்ட டென்னிஸ் போட்டி
செய்தி முன்னோட்டம்
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரே மற்றும் டெய்லர் ஃபிரிட்ஸ் மோதிய காலிறுதிப் போட்டி போட்டி போராட்டக்காரர்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.
போட்டிக்கு நடுவே காலநிலைப் பேரழிவு மற்றும் புதைபடிவ எரிபொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள் உள்ளே புகுந்து ராட்சத பந்துகளை மைதானத்தில் வீசியதால் போட்டி சிறிதுநேரம் தடைபட்டது.
பாதுகாவலர்கள் போராட்டக்காரர்களை வெளியேற அனுப்பிய பிறகு ஃபிரிட்ஸும் முர்ரேயும் மீண்டும் விளையாடினர்.
இறுதியில் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஆண்டி முர்ரேவை 6-7 (2/7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் வீழ்த்தினார்.
இதற்கிடையே, சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ
The Taylor Fritz/ Andy Murray match @mubadalacitidc
— John Gonzalez (@John7News) August 4, 2023
was just delayed due to protesters. They threw giant balls onto the court and held signs that read “Climate Disaster & “End Fossil Fuels”. @USParkPolice & tournament staff escorted them out, match resumed after 5 min@7NewsDC pic.twitter.com/XniKN3IPNw