
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ். தோல்வி
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரணாய் எச்.எஸ். தோல்வியடைந்தார்.
சிட்னியில் உள்ள ஸ்டேட் ஸ்போர்ட்ஸ் சென்டரில் நடந்த இந்த போட்டியில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை எதிர்கொண்ட பிரணாய் முதல் செட்டில் 9-21 என எளிதாக வீழ்ந்தார்.
எனினும், பின்னர் மீண்டு வந்த பிரணாய் இரண்டாவது செட்டில் 23-21 என முன்னிலை பெற்ற நிலையில், மூன்றாவது செட்டில் கடுமையாக போராடியும் 20-22 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார்.
இதன்மூலம், மூன்று செட்களில் இரண்டை இழந்ததால், பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
முன்னதாக, மலேசியா ஓபன் இறுதிப்போட்டியிலும், இதே சீனாவின் வெங் ஹாங் யாங்கை எதிர்கொண்டு பிரணாய் தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ். தோல்வி
A remarkable run at #AustraliaOpen2023 comes to an end for Prannoy💔. Well done champ we're proud of you 🙌✨
— BAI Media (@BAI_Media) August 6, 2023
📸: @badmintonphoto#AustraliaOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/AsTfyRfcs8