
ஆஸ்திரேலிய ஓபன் 2023 : பிரணாய் எச்.எஸ்., பிரியன்ஸு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் பிரணாய் எச்.எஸ். மற்றும் பிரியன்ஸு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்த காலிறுதியில் பிரணாய் எச்.எஸ்., தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அந்தோணி எஸ் ஜிண்டிங்கிடம் முதல் செட்டில் 16-21 என இழந்தாலும், அதன் பின்னர் மீண்டு அடுத்தடுத்த செட்களில் 21-17, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மறுபுறம், இந்தியாவின் இளம் வீரர் பிரியன்ஸு ரஜாவத் சக இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்தை 21-13, 21-8 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்றார்.
இதையடுத்து பிரியன்ஸு ரஜாவத் அரையிறுதியில் பிரணாய் எச்.எஸ்ஸை எதிர்கொள்கிறார்.
இதற்கிடையே மகளிர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து காலிறுதியில் தோற்று வெளியேறினார்.
ட்விட்டர் அஞ்சல்
அரையிறுதியில் பிரணாய் எச்.எஸ் vs பிரியன்ஸு ரஜாவத் மோதல்
All set for 𝐒𝐞𝐦𝐢𝐟𝐢𝐧𝐚𝐥 𝐒𝐡𝐨𝐰𝐝𝐨𝐰𝐧 💥
— BAI Media (@BAI_Media) August 4, 2023
📸: @badmintonphoto#AustraliaOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/gvSDqFjVjK