காஷ்மீர் பெண்ணை திருமணம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் சர்ஃபராஸ் கான்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கான், ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், இந்திய அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் சர்ஃபராஸ் கான், இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் நம்பிக்கையை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றார். 25 வயதான சர்ஃபராஸ் கான், 39 முதல்தர போட்டிகளில் விளையாடி, 74.14 என்ற சராசரியில் 13 சதங்கள் உட்பட 3,559 ரன்களைக் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 301* ஆகும்.