Page Loader
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி : சீனாவை வீழ்த்தி அசத்தலான வெற்றியுடன் தொடங்கியது இந்திய ஹாக்கி அணி
சீனாவை வீழ்த்தி அசத்தலான வெற்றியுடன் தொடங்கியது இந்திய ஹாக்கி அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி : சீனாவை வீழ்த்தி அசத்தலான வெற்றியுடன் தொடங்கியது இந்திய ஹாக்கி அணி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 04, 2023
11:22 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் வியாழன் (ஆகஸ்ட் 3) அன்று ஆடவர் இந்திய ஹாக்கி அணி தனது முதல் போட்டியில் சீனாவுக்கு எதிராக அசத்தலான வெற்றியுடன் தொடங்கியுள்ளது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் (5',8'), வருண் குமார் (19',30'), சுக்ஜீத் சிங் (15'), ஆகாஷ்தீப் சிங் (16') ஆகியோர் கோல் மழை பொழிந்தனர். மேலும், முன்கள வீரர் மந்தீப் சிங் (40') ஒரு கோல் அடித்ததன் மூலம் சர்வதேச ஹாக்கி போட்டியில் தனது 100வது கோலை அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் 7-2 என்ற கோல் கணக்கில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post